விதையில்லா திராட்சை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா.?! திராட்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.! - ஆரோக்கியம்

Saturday, 26 February 2022

விதையில்லா திராட்சை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா.?! திராட்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!



நமது இல்லங்களில் இருக்கும் சமயத்தில் பெற்றோர் நமக்காக இரவு நேரத்தில் பணியை முடித்து விட்டு வரும் சமயத்தில் திராட்சை பழத்தை வாங்கி வருவது வழக்கம்.

அந்த வகையில், சிலருக்கு கொட்டை இருக்கும் கருப்பு நிறத்திலான திராட்சைகளை பிடிக்கும். சிலருக்கு பச்சை நிறத்தில் இருக்கும் கொட்டையில்லாத திராட்சைகளை பிடிக்கும்.

அவரவின் விருப்பத்திற்கேற்ப இருக்கும் திராட்சைகளை அதிகளவில் விரும்பி உண்ணுவார்கள். உண்மையில் திராட்சை பழத்தில் பல விதமான திராட்சை பழங்கள் உள்ளது. கருப்பு நிறத்தில் இருக்கும் திராச்சை., பச்சை நிறத்தில் இருக்கும் திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, காபூல் திராட்சை, ஆங்குர் திராட்சை என்று பல விதமான திராட்சைகள் இருக்கிறது.

திராட்சை பழத்தில் இருக்கும் சர்க்கரை சத்துக்கள், கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின், பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசிச்சத்துக்களின் காரணமாக நடமது உடல் நலமானது மேம்படுகிறது.

நமது உடல் நலம் மேம்படும் என்று கூறிவிட்டு திராட்சை பழத்தை இரவு நேரத்தில் உண்ணக்கூடாது. திராட்சை பழமானது இயற்கையாகவே, உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கக்கூடியது என்பது, இரவு நேரத்தில் திராட்சையை சாப்பிட்டால் தூக்கம் கலைந்து உடலுக்கு புத்துணர்ச்சியானது கிடைக்கும்.

இதுமட்டுமல்லாது அல்சர் பிரச்சனைகள் இருக்கும் நபர்கள் திராட்சை பழம் மற்றும் இதர பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். உடலுக்கு சத்து வழங்கும் பழங்களை இரண்டு வேலை உணவு சாப்பிடுவதற்கு இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடுவது நல்லது. இதன் மூலமாக இரத்தத்தில் இருக்கும் குளுகோஸின் அளவானது சீர் செய்யப்பட்டு, உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.

திராட்சை பழத்தில் கொட்டை உள்ள திராட்சை மற்றும் கொட்டை இல்லாத திராட்சை பழங்கள் உள்ளது. இவைகள் இரண்டும் உடலுக்கு நல்ல சக்தியை வழங்கக்கூடியது. அளவோடு சாப்பிடும் வந்தால் எந்த விதமான பிரச்சனையும் இல்லை, அதிகளவு சாப்பிடும் பட்சத்தில், திராட்சை பழத்தில் இருக்கும் அமிலத்தன்மை காரணமாக வயிற்று பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment