தேங்காயின் ஆரோக்கிய நன்மைகள்.! - ஆரோக்கியம்

Wednesday, 2 March 2022

தேங்காயின் ஆரோக்கிய நன்மைகள்.!

 தேங்காய் சுலபமாக கிடைக்கும் அற்புதமான உணவு. தேங்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது சமைத்தும் சாப்பிடலாம்.

எப்படி சாப்பிட்டாலும் ஆரோக்கியமான இந்த காய், கனியின் அற்புத பலன்களையும் கொண்டது.

தைராய்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக விளங்கும் தேங்காய், தைராய்டு அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி அதை சரிப்படுத்துகிறது.

உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கு தைராய்டு அவசியம். கழுத்தின் அடிப்பகுதியில், பட்டாம்பூச்சி வடிவில்தைராய்டு சுரப்பி உள்ளது. ஒருவரின் பொது ஆரோக்கியத்திற்கு தைராய்டின் அளவு மிகவும் முக்கியமானது.

சரியாக சாப்பிடாதது, மன அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை தேர்வுகளின் விளைவாக பலருக்கு இளம் வயதிலேயே தைராய்டு பிரச்சனைகள் உருவாகின்றன.

சரிவிகித உணவை உண்பதன் மூலம் உங்கள் தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்கலாம். தேங்காய் தைராய்டு பிரச்சனையை போக்கும் சிறந்த உணவு என்று கருதப்படுகிறது.

உலர்ந்த தேங்காய்த் துண்டை வெறுமனே மென்று சாப்பிடலாம். தேங்காயில் உள்ளஆரோக்கியமான கொழுப்புகள்உடலுக்கு தேவையானது. சாப்பிடுவதற்கு சுவையான இந்த காய், மனச்சோர்வையும் விரட்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தேங்காயை பச்சையாக சட்னி செய்து சாப்பிட்டாலும் சரி, அரைத்து குழம்பு வைத்து சாப்பிட்டாலும் சரி, அது தனது நன்மை தரும் பண்பை மாற்றிக் கொள்வதில்லை.

தைராய்டு, எடை இழப்பு, இதய நோய் மற்றும் அல்சைமர் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல, இளநீர் குடிப்பதும் பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும். இளநீரில் உள்ள நீர் அருமையான பானமாக மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்படுகிறது.

இளநீரைக் குடித்தபிறகு, அதில் உள்ள வழுவலை (நீரை குடித்த பிறகு உள்ளே இருக்கும் மெலிதான தேங்காய் படிமம்) சாப்பிடுவது, தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மையைக் கொடுக்கும்.

தேங்காயை கீற்று போட்டு சாப்பிடுவது பலருக்கும் பழக்கமான ஒன்றாக இருக்கும். தேங்காயில் உள்ள நார்ச்சத்து, மிகவும் உயர்தரமான நார்ச்சத்துஎன்பது நினைவில் கொள்ளத்தக்கது.,

ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள் இருந்தாலும், எடை அதிகரிப்பு ,மனச்சோர்வு அல்லது சோம்பலாக இருந்தால், தேங்காயை சாப்பிட்டால் பயனளிக்கும். ஆனால், ஆரோக்கிய குறைவு ஏதேனும் ஏற்படும்போது மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது மிகவும் அவசியமானது.

தேங்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், பல பிரச்சனைகல் தோன்றாது என்பதே இந்த கட்டுரையின் அடிப்படையான கருத்து.

No comments:

Post a Comment