அன்றாட உணவில் வெங்காயத்தை சேர்த்து கொள்வதால் இவ்வளவு நன்மையா.! - ஆரோக்கியம்

Monday, 21 March 2022

அன்றாட உணவில் வெங்காயத்தை சேர்த்து கொள்வதால் இவ்வளவு நன்மையா.!

 

பச்சை வெங்காயத்தை சிறிதளவு தினமும் சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றது.

வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது

வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது. பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சோகை நோயை தவிர்க்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க வெங்காயத்தில் இருக்கும் குரோமியம் உதவுகிறது. மேலும், இதிலிருக்கும் சல்ஃபர் இன்சுலினை இயற்கையாக சுரக்கச் செய்வதால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம்.

தினசரி வெங்காயத்தை உட்கொள்ளும் மெனோபாஸ் நிலையில் உள்ள அல்லது மெனோபாஸ் முடிந்த பெண்களிடத்தில் எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

நாம் உண்ணும் உணவு பொருளில் காரம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நமக்கு சீதபேதி வருவதற்கான வாய்ப்பு உண்டு. அந்த சமயத்தில் வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி உடனே நிற்கும்.

உடலில் வலிமை இல்லாதவர்கள் சிறிது வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட்டாலோ அல்லது வெங்காயச் சாற்றை நீரில் கலந்து குடித்தாலோ, அதன்பின்பு நல்ல தூக்கம் வரும்.

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. இதனால் உடல் பருமன் உள்ளவர்கள் வெங்காயத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் பருமனையும் கரைத்து, ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கிறது.

வெங்காயச் சாற்றினை ஒரு நாளைக்கு ஒரு மூடி வீதம், மூன்று வேளைகள் சாப்பிட்டு வரவேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து புகை பிடிப்பவர்களின் நுரையீரல் சுத்தப்படுத்தப்படும்.

No comments:

Post a Comment