அரிசியை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் பருத்து விடும் என பலர் சொல்வதை கேட்டிருக்கக் கூடும். ஆனால், நீங்கள் எப்போது, எந்த நேரத்தில் சாதம் சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருந்தால் போதும் என்கின்றனர் நிபுணர்கள்.
சாதம் சாப்பிட்டால் உடல் பருமன் என்று பலர் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஆனால் அது உண்மை அல்ல. ஏனென்றால் நீங்கள் எப்போது, எந்த நேரத்தில் சாதம் சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருந்தால் போதும் என்கின்றனர் நிபுணர்கள்.
இரவில் சாதம் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று பலர் நம்புகிறார்கள், அதே நேரத்தில் வெள்ளை அரிசி சாப்பிடுவதற்கு பதிலாக பழுப்பு அரிசியை சாப்பிட வேண்டும் என்று பலர் அறிவுரை கூறுகிறார்கள். எனவே சாதம் சாப்பிடுவது தொடர்பான அனைத்து வகையான கட்டுக்கதைகளும் அதன் பின்னணியில் உள்ள உண்மையையும் அறிந்து கொள்வோம்.
சாதம் தொடர்பான சில கட்டுக்கதைகள்
சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது என்று பலர் நம்புகிறார்கள். நீங்கள் அரிசியை பொங்கலாக செய்து சாப்பிட்டாலோ, அதில் குழப்பு காயோடு சாப்பிட்டாலோ, அதில் அமினோ அமிலங்களும், அரிசியில் உள்ள ஊட்ட சத்துக்களும் சேர்த்து நன்மை பயக்கும் .
இது தவிர, அரிசியில் க்ளூடன் இருப்பதாக பலர் நம்புகிறார்கள். வெள்ளை மற்றும் பழுப்பு அரிசியில் க்ளூடன் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
வெள்ளை அரிசி உடல் பருமனை அதிகரிக்கும் என்று நம்பும் பலர் பழுப்பு அரிசி சாப்பிட வேண்டும் என்கிறார்கள். பழுப்பு அரிசியில் அதிக தாதுக்கள் உள்ளது. தவிடு நார்ச்சத்து நிறைந்த பகுதியாகும். அதனால் ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், அதற்காக வெள்ளை அரிசியின் காரணமாக எடை கூடும் என்பதல்ல.
வெரைட்டி ரைஸ் சாப்பிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், வெரைட்டியுடன், சாதம் சாப்பிடும் போது, உடல் பருமன் அதிகரிக்காது. அதாவது, உங்கள் ஆரோக்கியத்தையும் எடையையும் பராமரிக்க விரும்பினால், காய்கறிகள் சேர்த்த அரிசியை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது
No comments:
Post a Comment