May 2022 - ஆரோக்கியம்

Wednesday, 11 May 2022

பாசிப் பருப்பை வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டால், கெட்ட கொலஸ்ட்ரால் இருமடங்கு வேகத்தில் குறையும்.!

May 11, 2022 0
பாசிப் பருப்பை வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டால், கெட்ட கொலஸ்ட்ரால் இருமடங்கு வேகத்தில் குறையும்.!

நாம் ஆரோக்கியமாக இருப்பதற்காக உண்ணும் உணவுகளை கவனமாக தேர்ந்தெடுத்து உண்போம். அப்படி உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடிய உணவுப் பொருள் தான் பருப்பு வகைகள்.

இந்த பருப்பு வகைகளில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக பருப்புக்களில் புரோட்டீன் அதிகம் உள்ளது. ஆகவே தான் பெரும்பாலான நிபுணர்கள் பருப்பு வகைகளை உண்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம் என்று நம்புகின்றனர்.

மனித உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளன. அவை நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால். உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவு அதிகரித்தால், மாரடைப்பின் அபாயம் அதிகரிக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில், பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். பருப்பு வகைகளில் பல உள்ளன. அதில் சில பருப்புகள் கொலஸ்ட்ராலை கணிசமாக குறைக்கும். அப்படிப்பட்ட ஓர் பருப்பு தான் பாசிப்பருப்பு.


கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் பாசிப்பருப்பு

பாசிப்பருப்பு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. பாசிப்பருப்பை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மாரடைப்பின் அபாயம் குறையும். ஏனெனில் எப்போது ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறதோ, அப்போது மாரடைப்பின் அபாயமும் அதிகரிக்கும். அதுவும் வாரத்திற்கு மூன்று முறை பாசிப்பருப்பை சாப்பிட்டால், இதயம் பாதுகாப்பாக இருக்கும்.

பாசிப்பருப்பின் பிற நன்மைகள் என்ன?

எடை இழப்பு

பாசிப்பருப்பு உடலில் கோலிசிஸ்டோகினின் என்ற ஹார்மோனின் இருப்பை அதிகரிக்கிறது. ஆகவே இந்த பருப்பை உண்டதும் வயிறு நிறைந்த உணர்வு எழுகிறது. அதோடு, இது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும் மெட்டபாலிச அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்கும்

பாசிப்பருப்பு உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், காப்பர், நார்ச்சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே, டயட்டரி நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் பல அடங்கும். இந்த சத்துக்களுடன் பாசிப்பருப்பு உடல் திசுக்கள், தசை மற்றும் குருத்தெலும்புகளின் வளர்ச்சிக்கும், அதை சரிசெய்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சர்க்கரை நோயைத் தடுக்கிறது

பாசிப்பருப்பில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு குறைவாக இருப்பதால், இது உடலில் இன்சுலின் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆகவே இந்த பருப்பை அடிக்கடி உணவில் சேர்ப்பது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

செரிமானத்திற்கு நல்லது

செரிமான அமைப்பில் பியூட்ரேட் என்னும் சிறப்பான கொழுப்பு அமிலத்தை உற்பத்தி செய்ய உதவுவதால், பாசிப்பருப்பு செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக பாசிப்பருப்பு லேசான எடையைக் கொண்டதால், இது ஜீரணிக்க மிகவும் எளிதாக இருக்கும்.

இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது

பாசிப்பருப்பில் இரும்புச்சத்து இருப்பதால், இது உடலில் போதுமான அளவு இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனால் இரத்த சோகையின் அபாயத்தைக் குறைக்கிறது. அதோடு இது உடலின் பல்வேறு உறுப்புகள் மற்றும் உயிரணுக்களை இரத்தம் அடைந்து ஆக்ஸிஜனை வழங்குகிறது. மொத்தத்தில், இது உடல் செயல்பாடுகளின் சரியான செயல்திறனை உறுதி செய்கிறது.

Sunday, 8 May 2022

கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்து.!

May 08, 2022 0
கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்து.!



பழங்களிலேயே அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.முழு அளவு காட்டு கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும், குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.
* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.
* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.
* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.
* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.
* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.